செல்ஃபி மோகத்திற்கு ஐந்து மாணவர்கள் பலி

பெங்களூரு: தெலுங்கானாவைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் ஐந்து பேர் தர்மசாகர் அணையின் நீர்த்தேக்கம் அருகே செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். வாராங்கல் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் சர்வையா ரெட்டி என்ற மாணவி தன்னுடைய தோழர்களுடன் தர்மசாகர் அணைக்கு சுற்றுலாவிற்குச் சென்றுள்ளார். அப்போது அணையின் நீர்த்தேக்கத்தின் மீது நின்று கொண்டு மாணவி சர்வையா செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் கால் இடறி நீர்த் தேக்கத்தில் விழுந்துள்ளார். இதனைக் கண்டு பதறிய சக மாணவர்கள் அவரைக் காப்பாற்ற நீரில் குதித்ததில் ஐவர் நீரில் முழ்கி உயிரிழந்தனர்.

Loading...
Load next