ராம்குமார் மரணம்: உண்மையை விவரிக்க போலிசுக்கு உத்தரவு

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மென்பொறியாளர் சுவாதி என்னும் இளம்பெண் கடந்த ஜூன் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6.40 மணி யளவில் அடையாளம் தெரியாத மர்மநபரால் படுகொலை செய்யப்பட்டார். ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக ஜூலை 1ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம் குமார், 22, என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அப்போது, ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக போலிசார் கூறினர். அதன் பிறகு சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதி யாக ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்தார். 80 நாட்கள் சிறையில் இருந்த அவர் தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி நேற்று நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய விருந்தார். ஆனால், நேற்று முன் தினம் சிறையின் சமையலறையில் இருந்த மின்கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட் டது.

ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டபோது ராம்குமார் ஏற்கெனவே மாண்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிவிட்டுள் ளது. உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. ராம்குமார் மரணத்தைக் கேள் விப்பட்டதும் ஒருசில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டையில் பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தினர். தமது மகன் கொல் லப்பட்டதாக ராம்குமாரின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து சிபிஐ முழுமையாக விசா ரிக்க வேண்டும் என ராம்குமாரின் வழக்கறிஞர் கோரி வருகிறார்.

சிறையிலிருந்த ராம்குமார் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் பரவியதும் ராயப் பேட்டை சாலையில் திரண்ட அரசியல் கட்சியினர் அங்கு மறியலில் ஈடுபட்டனர். படம்: தமிழக ஊடகம்

Loading...
Load next