போதையில் கார் ஓட்டிய சட்டக்கல்லூரி மாணவர்; ஆட்டோ ஓட்டுநர் பலி

சென்னை: சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் போதையில் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந் தார். இதில் காரை ஓட்டி வந்த மாணவரும் அவரது நண்பரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இரு மாணவர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கதீட்ரல் சாலையில் நேற்று அதிகாலை 3.00 மணி அளவில் விபத்து நிகழ்ந்தது. அப்போது ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் கள் மீது ‘போர்ஷே’ என்ற வெளி நாட்டு ஆடம்பரக் கார் மோதியது. சட்டக்கல்லூரி மாணவர் விகாஸ் விஜயானந்த், 22, காரை ஓட்டி வந்தார். அவர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது கார் மோதியதில் ஆறுமுகம் என்ற ஆட்டோ ஓட்டுநர் பலியானார். ஏறக்குறைய 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. விகாஸ் ஓட்டி வந்த காரும் சேதமடைந்தது. மேலும் சாலை யோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் தூங்கிய ஓட்டுநர்கள் 9 பேர் காயம் அடைந்தனர். முன்னதாக அதே காரில் விகாஸ், மெரீனா கடற்கரையை நோக்கி அதிவேகத்தில் சென்ற தாகக் கூறப்படுகிறது.

சட்டக்கல்லூரி மாணவர் ஓட்டி வந்த ஆடம்பரக் கார் நசுங்கி கிடக்கும் காட்சி. படம்: இந்திய ஊடகம்

Loading...
Load next