விமானத்தில் வெடிகுண்டுப் புரளி

கோல்கத்தா: கோல்கத்தா விமான நிலையத்தில் புறப்படு வதற்குத் தயாராக இருந்த ஏர் இந்தியா ஏஐ=729 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று காலை ஒரு மர்மத் தொலைபேசி அழைப்பு வந்தது. இதைத் தொடர்ந்து கோல்கத்தாவில் இருந்து கௌகாத்திக்குச் செல்லவிருந்த அவ்விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்களால் விமானத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே, வெடிகுண்டுப் புரளியைப் பரப்பியவர் ஒரு பெண் என்றும் அவர் ராஜர்ஹர்ட் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

Loading...
Load next