ராம்குமார் பிரேத பரிசோதனையில் சுணக்கம்

சென்னை: இளம் பெண் சுவாதி படுகொலை வழக்கில் சிக்கி சிறையில் உயிரை மாய்த்துக் கொண்ட ராம்குமாரின் உடல் இன்னும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இதனால் அவரது உடலைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை செய்வது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. ராம்குமாரின் திடீர் மரணம் பல் வேறு கேள்விகளையும் சந்தேகங்க ளையும் எழுப்பி உள்ளது. அவற் றுக்கு விடை தெரியாத நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டால் மட்டுமே மகனின் சட லத்தை வாங்கப்போவதாக ராம் குமாரின் தந்தை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுவாதி படு கொலை குறித்து சிறையில் சக கைதிகள் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் பலவிதமாகப் பேசி வந்ததாகவும், அதன் காரணமா கவே மன உளைச்சலுக்கு ஆட் பட்டு ராம்குமார் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுத்ததாகவும் தமிழக ஊடகம் செய்தி வெளி யிட்டுள்ளது. இது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராம்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பில் ஒரு மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என அவரது தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன் றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளுக்கிடையே பரம சிவத்தின் கோரிக்கையை ஏற்பது தொடர்பில் கருத்து வேறுபாடு நிலவியது. இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்கு இருவரும் தடை விதித்தனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை மூன்றாவது நீதி பதி கிருபாகரன் நடத்துவார் என தலைமை நீதிபதி கவுல் அறிவித் துள்ளார். இந்த விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதற்கிடையே சுவாதி கொலை வழக்கு குறித்து தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளி யிட்டு வரும் பிரான்சைச் சேர்ந்த தமிழச்சி, ராம்குமார் தந்தை உயிருக்கும் தமக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தமது புதிய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!