சென்னை விமான நிலையத்திலிருந்து நகருக்குள் செல்ல ரயில் சேவை துவக்கம்

சென்னை விமான நிலையத்திலி ருந்து நகருக்குள் இனி ரயிலில் செல்லலாம். இதற்கான மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கியது. விமான நிலையம் தொடங்கி சின்னமலை வரை 8.6 கிலோ மீட்டர் நீளமுள்ள புதிய மெட்ரோ ரயில் பாதையில் ஆறு நிலையங்கள் உள்ளன. சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கல்லூர் சாலை, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை ஆகியன அந்த மெட்ரோ நிலை யங்கள். சென்னையின் ஆகப் பெரிய பேருந்து நிலையம் அமைந்துள்ள கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயிலில் செல்ல லாம். அதற்கான கட்டணம் ஐம்பது ரூபாய்.

இருப்பினும் விமான நிலையம் வந்து சேர கோயம்பேட்டில் இருந்து வேறொரு மெட்ரோ ரயில் மூலம் வந்து ஆலந்தூரில் மாறி புதிய மெட்ரோ ரயிலில் ஏற வேண்டும். இந்தப் புதிய மெட்ரோ ரயில் சேவையை நேற்றுக் காலை முதல் வர் ஜெயலலிதா தலைமைச் செயல கத்தில் இருந்தவாறு காணொளி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கையா நாயுடு விமான நிலையத்தில் கொடி அசைத்து முதல் பயணத்தைத் தொடங்கி வைத்தார். இரு மார்க் கத்திலும் பயணத்தைத் தொடங் கிய ரயில்களை ஹம்சவேணி, நளினி ஆகிய ஓட்டுநர்கள் இயக் கினர். இந்தப் புதிய ரயில் சேவை விமானப் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மட்டுமே வெளியேறும் நிலைமை இருந்து வந்தது. ஆட்டோ, பேருந்து போன்ற வற்றில் பயணம் செய்ய விமான நிலையத்திலிருந்து நீண்டதூரம் நடந்து வெளியேறி வர வேண்டிய நிலையும் இருந்தது.

மெட்ரோ ரயில்கள் இயங்குவதால் விமானப் பயணிகள் சென்னை நகருக்குள் விரைவாகவும் குறைந்த செல விலும் இனி செல்லலாம். இந்தப் புதிய வசதி குறித்து தமிழ் முரசிடம் கருத்துத் தெரிவித்த திருமதி கமலாதேவி, 52, என்பவர், "சென்னை விமான நிலையத்தையும் நகர்ப்புற பகுதி களையும் இணைக்கும் சென்னை மெட்ரோ ரயில் சேவை மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்த ஊக்குவிக்கும்," என்றார். இவரது உறவினர்கள் சென்னை வடபழனியில் வசிக்கின்றனர். "அதிக மக்கள்தொகை கொண்ட சென்னையில் போக்குவரத்தை துரிதப்படுத்த இந்த ரயில் சேவை உதவும்," என்று கூறினார் திரு ப‌ஷீர் அஹமது, 37. சிங்கப்பூரில் வசிக்கும் இவரது சொந்த ஊர் புதுச்சேரி என்றாலும் மருத்துவ பரிசோதனைக்காக அவ்வப்போது சென்னை செல்கிறார்.

விமானப் பயணிகளை வழி அனுப்பவும் வரவேற்கவும் வரு வோர்கூட இனி சிரமப்பட வேண்டி இருக்காது. புதிய ரயில் சேவையில் நாள் ஒன்றுக்கு 15,000 பேர் வரை பயணம் செய்வார்கள் என்று மதிப் பிடப்பட்டுள்ளது. ‚நேற்று தொடங் கப்பட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் சேவை யின் இரண்டாம் கட்டம் ஆகும். கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான முதற்கட்ட சேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

கூடுதல் செய்தி: முஹம்மது ஃபைரோஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!