உரி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

உரி தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் குறைந்தது 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட தாகத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த 18ஆம் தேதி அதி காலை காஷ்மீர் மாநிலம், உரி நகருக்கு அருகே எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட திடீர் பயங்கரவாதத் தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

தாக்குதல் நடத்திய நான்கு பயங் கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதி களுக்குத் தக்க பாடம் புகட்ட இந்தியா உறுதியாக இருந்தது. இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் சிறப்புப் படை யைச் சேர்ந்த 18-20 வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி யைத் தாண்டிச் சென்று பாகிஸ் தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்த மூன்று பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக ‘தி குவின்ட்’ செய்தி ஊடகம் தெரிவித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடந்த இந்த அதிரடித் தாக்குதலில் மேலும் 200 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் அதனால் பலி எண்ணிக்கை கூடலாம் என்றும் கூறப்பட்டது. ‘பயங்கரவாத பாகிஸ்தான்’ இதற்கிடையே, பாகிஸ்தான் ஒரு ‘பயங்கரவாத நாடு’ என்றும் பயங் கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது என்ற தனது நீண்டகாலக் கொள் கையின் மூலம் அந்த நாடு இந்தியர்களுக்கு எதிராகப் ‘போர்க் குற்றங்களில்’ ஈடுபட்டு வருகிறது என்றும் ஐநா பொது மன்றக் கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து நவாஸ் ஷரிஃப் பேசிய சில மணி நேரங்களிலேயே ஐநாவிற்கான இந்தியச் செயலாளர் ஈனாம் கம்பீர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“பயங்கரவாதத்திற்கு உறு துணையாக இருப்பது என்ற பாகிஸ்தானின் நீண்டகாலக் கொள்கையால் எங்கள் நாடும் அண்டை நாடுகளும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவுகள் எங்களது வட்டாரத்தைத் தாண்டியும் பரவி உள்ளன,” என்றார் திருவாட்டி கம்பீர். அத்துடன், அனைத்துலக நாடுகள் அளிக்கும் பில்லியன் டாலர் கணக்கிலான நிதியுத வியை பாகிஸ்தான் பயங்கரவாதி களுக்குப் பயிற்சியளிக்கச் செல விட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

ஜெய்ஷ்-இ-முகம்மது இயக் கத்தின் தலைவன் மசூத் அசார், மும்பை தாக்குதலுக்கு மூளை யாகச் செயல்பட்ட லக்வி ஆகி யோர் பாகிஸ்தானில் சுதந்திர மாகச் சுற்றித் திரிவதாகக் குறிப்பிட்ட அவர், ஒசாமா பின் லாடன் அங்கு மறைந்து வாழ்ந்த தையும் சுட்டிக்காட்டினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தாம் ஏதும் பேசவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஊடகம்

22 Nov 2019

ஆட்சி அமைப்பது குறித்து பிரதமரிடம் ஏதும் பேசவில்லை என சரத்பவார் திட்டவட்டம்

81 வயதான பரூக் அப்துல்லா, கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய அரசு முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. கோப்புப்படம்: ஊடகம்

22 Nov 2019

காஷ்மீரில் 5,000 பேரை கைது செய்துள்ளதாக அரசு தகவல்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமானேனியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

21 Nov 2019

தெலுங்கானா எம்எல்ஏவின் குடியுரிமை பறிப்பு