பெண்ணை காக்க காதை இழந்த மளிகைக் கடைக்காரர்

சென்னை: இளம்பெண்ணிடம் நகை பறித்த திருடர்கள் அவரை ஆட்டோவில் கடத்த முயன்ற போது மளிகைக் கடைக்காரர் அவரைக் காப்பாற்றியுள்ளார். சென்னை, துரைப்பாக் கத்தைச் சேர்ந்த சேகர் கடந்த 18ஆம் தேதி சாலையில் சென்ற போது இளம்பெண்ணைச் சிலர் ஆட்டோவில் கடத்த முயன்றனர். இதைக் கண்ட அவர் ஓடிச் சென்று அப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தவனை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளியுள்ளார். “இதில் அப்பெண்ணும் கீழே விழுந்தார். பிறகு அந்நபரை மடக்கிப் பிடிக்க முயன்றேன். அதற்குள் ஆட்டோவில் வந்தவர் கள் கீழே இறங்கி பட்டாக் கத்தியால் என்னைத் தாக்கினர்.

“முகத்தையும் கழுத்தையும் வெட்ட கத்தியை வீசியபோது நான் திரும்பிக் கொண்டதால் கத்தி என் வலது காதை துண் டாக்கியது. அதற்குள் பொதுமக் கள் கூடியதால் அக்கும்பல் தப்பிவிட்டது,” என்கிறார் சேகர். பின்னர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்ற சேகருக்கு கிழிந்த காதில் 23 தையல்கள் போடப்பட்டன. இளம்பெண்ணும் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறியுள்ளார். “அவர் பெயர் சிநேகலதா. கர்நாடகாவைச் சேர்ந்தவர். சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவரது குடும்பத்தார் நேரில் வந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது மனநிறைவைத் தந்தது,” என்கிறார் சேகர்.

Loading...
Load next