காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேவகவுடா எதிர்ப்பு

சென்னை: காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகாவில் கொந் தளிப்பான சூழ்நிலை நிலவும் வேளையில் தமிழகத்திற்கு தண் ணீர் திறந்துவிடக் கூடாது என அங்குள்ள பெரும்பாலான தலை வர்கள் வலியுறுத்தி உள்ளனர். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசானது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முழு மையாக நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதற்கிடையே தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா முதல்வர் சித்தராமை யாவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு இம்மாதம் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தினமும் 6,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட வேண் டும் என கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்நிலையில் முதல்வர் சித்த ராமையா தலைமையில் பெங்க ளூருவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் தமிழகத்திற்கு தண் ணீர் திறந்துவிடக் கூடாது என ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தி னர். இக்கூட்டத்தில் பாஜக பங் கேற்கவில்லை. இதையடுத்து கர்நாடகா அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது. அதன் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்ட ஆலோசனையின் பேரில், 23ஆம் தேதி (இன்று) வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறப்ப தில்லை என அமைச் சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட தாகக் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த இயலாது என்றார் அவர். இதற்கிடையே கர்நாடகா வில் குடிக்கவே தண்ணீர் இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிக்கு பற்கள் உடைந்ததுடன், நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. படம்: ஊடகம்

20 Nov 2019

ஓடும் பேருந்திலிருந்து மாணவியைக் கீழே தள்ளிய நடத்துநர்