வெள்ளத்தில் மிதக்கிறது ஹைதராபாத்

நகரி: கடந்த 2000ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம்போல் இப்போ தும் ஹைதராபாத் நகரை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு நேற்று மாலை பெய்த பலத்த மழையால் அந் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் மழை தொடர்பிலான சம்பவங்களால் உயிரிழந்தனர். சுவர் விழுந்ததில் கொம்பளியைச் சேர்ந்த 55 வயது ஆடவர் ஒருவரும் மின்சாரம் தாக்கியதில் பிரகதி நகரைச் சேர்ந்த 39 வயது பொறியாளர் ஒருவரும் மௌலாலி யில் கால் தவறி கால்வாய்க்குள் விழுந்த இளையர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஹைதராபாத்தின் பல பகுதி களும் வெள்ளத்தில் மிதப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங் களுக்கு இடம்பெயர்ந்து வருகின் றனர். அவர்களுக்கு உணவும் தங்குமிட வசதிகளும் வழங்கப் பட்டு வருகின்றன. ஹைதராபாத் இயக்குநர் ஒய்.கே. ரெட்டி கூறும்போது, “இன்னும் இரண்டு நாட்களுக்கு 11 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை யிலான கனத்த மழையைத் தொடர்ந்து எதிர்பார்க்கலாம்,” என்று தெரிவித்துள்ளார். ஹைதராபாத் நகர் முழுவதும் இடைவிடாமல் கொட்டிய மழை வெள்ளத்தால் முசாபேட்டை, நிஜாம்பேட்டை, குகாட்பள்ளி, குத் புல்லாபூர், மியாசர், ஷாபூர் நகர், மதினா குடா, ஜீடிமெட்லா, ஆல் வால், கப்ரா, பேகம்பேட்டை உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குடி யிருப்புகளில் மழை நீர் புகுந்தது. முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கடும் அவதி அடைந்தனர். பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்