2 பவுன் நகைக்காக இருவர் கொலை

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத் துள்ள வண்ணாம்படுகை அருகே உள்ள நரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி (54). இவரது மனைவி ராஜாமணி (50). இத்தம்பதியினர் தங்களது தோட் டத்து வீட்டில் 2011ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி தூங்கிக்கொண்டிருந்தபோது யாரோ வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ராஜாமணி அணிந்திருந்த இரண்டு பவுன் நகையைக் கொள்ளையடித்துள்ளார். இதைத் தடுக்க முயன்ற தம்பதி இருவரையும் குத்திக் கொலை செய்து அவர் களின் உடல்களை அருகிலுள்ள பவானி ஆற்றில் வீசி விட்டுச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஆறுமுகம் (32) என்பவருக்கு நேற்று முன்தினம் கோவை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Loading...
Load next