காதல் விவகாரத்தில் மாணவர்கள் மோதல்: ஆசிரியருக்கு கத்திக்குத்து

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பழையனூரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (17) இவரது நண்பர்கள் சத்யா, ராஜேஷ் (17). மூவரும் பழையனூர் அரசுப் பள்ளியில் பிளஸ்=2 படிக்கின்றனர். ஒரு பெண்ணைக் காதலிப்பது தொடர்பாக இவர்கள் மூவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற ராஜபாண்டி கத்தியுடன் சத்யா, ராஜேஷ் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களைக் குத்த முயன்றார். இந்த அடிதடி சண்டையைத் தடுக்க முயன்ற ஆங்கிலப்பாட ஆசிரியர் சமயன் (40) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் (35) என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக பழையனூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியைக் கைது செய்தனர். கத்தியுடன் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து சண்டை நடத்தப்பட்டதால் இதர மாணவர்கள் பதற்றமடைந்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று காலை தீர்ப்பு வழங்கியது. படம்: ஊடகம்

14 Nov 2019

சபரிமலைக்கு பெண்கள் செல்லத் தடையில்லை; வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

சிவசேனா கட்சியின் தலைமையகம். (படம்: ராய்ட்டர்ஸ்)

14 Nov 2019

நிபந்தனைகளை ஏற்றால் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - சிவசேனா சூசகம்