கோவை, திருப்பூரில் பதற்றம்

கோவை: இந்து முன்னணியின் கோவை மாநகர மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் சசிகுமார். இவர், நேற்று முன்தினம் இரவு கோவை, சுப்பிரமணியபாளையத் திலுள்ள தமது வீட்டிற்கு இரு சக் கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் சசிக்குமாரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. இந்தத் தாக்குதலில் சசிகுமா ருக்கு எட்டு இடங்களில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பகுதியினரால் மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரி வில் அனுமதிக்கப்பட்ட சசிகுமார் நள்ளிரவில் இறந்தார். அவர் இறந்த தகவல் அறிந்த இந்து முன்னணி யினர் மருத்துவமனை மீது தாக்கு தல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சசிகுமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தப் படுகொலைச் சம்பவத் துக்குக் கண்டனம் தெரிவித்து கோவை, திருப்பூரில் கடைகளை அடைக்க வற்புறுத்தியதால் பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட் டன. பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்