மீனாட்சி அம்மன் கோவில் நிலம்: பட்டா போட்ட அதிகாரி நீக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்த மான ஒரு ஏக்கர் 82 சென்ட் நிலம் சொக்கிகுளத்தில் உள்ளது. இந்த நிலம் 10 பேருக்கு பட்டாவாக மாற்றி கொடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவிடம் கோவில் இணை ஆணையர் நடராஜன் கடந்த மாதம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணைக்குப் பிறகு அந்தப் பகுதி கிராம நிர்வாக அதிகாரி அரசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் பட்டா வழங்கிய வடக்கு தாலுகா தாசில்தார் அன்பழகனுக்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் டி.ஆர்.ஓ. வேலுச்சாமி கொடுத்த அறிக்கையின்படி தாசில்தார் அன்பழகனை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்