அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்றும் அக்டோபர் 21ஆம் தேதி வாக்கு எண் ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையர் சீதாராமன் நேற்று மாலை இதனை அறிவித்தார். தமிழ்நாட்டில் 12 மாநகராட்சி கள், 124 நகராட்சிகள், 31 மாவட்டப் பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. மாநக ராட்சிகளில் 919 வார்டுகள், நகராட்சிகளில் 3,613 வார்டுகள், பேரூராட்சிகளில் 8,288 வார்டு கள், மாவட்ட பஞ்சாயத்துகளில் 655 வார்டுகள், பஞ்சாயத்து யூனி யன்களில் 6,471 வார்டுகள், கிராமப் பஞ்சாயத்துகளில் 99,324 வார்டுகள் என மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகள் உள்ளன. வார்டு கவுன்சிலர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் கள் ஆகிய பதவிகளுக்கு மட் டும் நேரடித் தேர்தல் நடக்கிறது. மேயர்கள், நகராட்சி, பேரூ ராட்சி, மாவட்டப் பஞ்சாயத்து மற் றும் பஞ்சாயத்து யூனியன் தலை வர்கள் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார் கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!