ஹைதராபாத் வெள்ளம்: 28,000 கட்டடங்களை இடிக்க முடிவு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் ஆந்திரா, தெலுங்கானா மாநி லங்களில் கடந்த ஆறு நாட் களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில் தலைநகர் ஹைதராபாத், ரங்காரெட்டி, கம் மம், வாரங்கல், மேடக் போன்ற மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்து வரும் பலத்த மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்பதற்காக ஹைதராபாத் துக்கு ராணுவம் விரைந்தது. ஹைதராபாத் அருகே உள்ள பேகம்பேட்டை, நிசாம்பேட்டை, ஹக்கிம்பேட்டை போன்ற பகுதி களிலும் மீட்புப் பணிகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி பத்துப் பேர் வரை மாண்டுவிட் டனர். குறிப்பாக, மேடக் மாவட் டத்தில் ஒரே நாளில் நால்வர் உயிரிழந்தனர். அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக் கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள தால் நிலைமை மேலும் மோச மடையும் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்நிலையில், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வழி களை அடைத்து சட்டவிரோத மாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங் களை தெலுங்கானா அரசு ஆய்வு செய்தது. அவ்வகையில் 28,000 கட்டடங்கள் ஆக்கிரமித்து கட் டப்பட்டுள்ளதாகத் தெரியவந்த தை அடுத்து அந்தக் கட்டடங்கள் அனைத்தும் இடித்துத் தள்ளப் படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோவிலுக்கு வரவேண்டும் என யாராவது நினைத்தால், நீதிமன்றம் சென்று உரிய உத்தரவுகளுடன் வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். படங்கள்: ஊடகம்

15 Nov 2019

அமைச்சர்: சபரிமலைக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்

மனிதர்கள் சுவாசிக்கத்  தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால் இம்மாதம் முதல்  தேதி அங்கு மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. படம்: ஊடகம்

15 Nov 2019

புதுடெல்லி: சுவாசிக்க காற்றை விற்பனை செய்யும் ‘ஆக்சிஜன் பார்’