அமலாக்கத் துறை கண்காணிப்பு: கரூர் அன்புநாதன் கைதாக வாய்ப்பு

கரூர்: சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் ரூ.4.77 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் கரூர் மாவட்ட அதிமுக பிரமுகர் அன்புநாதனை அமலாக்கத் துறை அதிகாரிகள் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஆறு பேர், கரூர் அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதன் வீடு, கிடங்கு உள்ளிட்ட பகுதிகளை நோட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அன்புநாதன் தற்போது கரூரில் இல்லை என்றும் எனவே அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. அன்புநாதன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.