போலி ஆவணங்கள்: சசிகலா புஷ்பா மீது புது வழக்குப் பதிவு

சென்னை: பாலியல் புகார் தொடர் பான வழக்கில் முன்பிணை பெற போலி ஆவணங்களை நீதிமன்றத் தில் தாக்கல் செய்ததாக அதி முகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசி கலா புஷ்பா மீது வழக்குப் பதி வாகியுள்ளது. மதுரை போலிசார் இந்நடவடிக் கையை மேற்கொண்டுள்ளனர். சசிகலா புஷ்பா வீட்டில் பணிப் பெண்களாக வேலை பார்த்து வந்த 2 இளம் பெண்கள், அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது பாலியல் புகார் கொடுத்துள் ளனர். இது தொடர்பாக காவல்துறை யின் விசாரணை தொடங்கியதை யடுத்து சசிகலா புஷ்பா கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் பரவியது.

இதனால் டெல்லி சென்ற சசிகலா புஷ்பா, அங்கிருந்தபடியே முன்பிணை வழங்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அவரது கணவரும் மகனும் கூட பிணை கோரியுள்ளனர். எனினும் சசிகலா வெளிநாடு சென்றிருந்த நிலையில் அவரது முன்பிணை மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதைய டுத்து பிணை மனுவில் அவர் எப்படி கையெழுத்திட்டார்? என்ற கேள்வி எழுந்தது. எனவே, முன்பிணை மனு பெற சசிகலா புஷ்பா போலி ஆவணங் களைத் தாக்கல் செய்திருப்பதாக உயர்நீதிமன்றக் கிளையின் பதிவா ளர் மதுரை காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் மீது மதுரை போலிசார் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். சசிகலா புஷ்பா முன்பிணை கோரி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசா ரணை நடைபெறவுள்ளது.

Loading...
Load next