ஜெயா மீது அக்கறை கொண்ட கர்நாடக முதல்வர் தமிழக நலனிலும் அக்கறை காட்ட வேண்டும் - வைரமுத்து

சென்னை: தமிழக முதலமைச்சர் நலத்தில் அக்கறை கொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழ்நாட்டு நலத்திலும் அக்கறை காட்ட வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதல்வர் நலம்பெற வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில் தமிழக முதல்வரை வாழ்த்தி இருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளம் எனத் தெரிவித்துள்ளார்.

“இந்தப் பொதுவெளிப் பண் பாடு போற்றுதலுக்குரியது, தொடர வேண்டியது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். கர்நாடகா முதல்வர் சித்தரா மையாவின் வாழ்த்தும் ஆழ்ந்த கவனம் பெறுகிறது. அவருக்கு நன்றி. “தம் சுட்டுரையில் தமிழக முதல்வர் உடல்நலம்பெற வாழ்த்தி இருக்கும் கர்நாடகா முதல்வர், அந்த உடல்நலக் குறைவுக்கான காரணத்தையும் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை,” என வைரமுத்து கூறியுள்ளார்.

நீர்ச்சத்துக் குறைவுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவுக்கு முதற்காரணம் என மருத்துவ அறிக்கை சொல்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஓர் உடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலே உடல்நலம் சீர்கெடும் என்றால், மாநிலத்தின் நீர்ச்சத்து குறைந்தால் தமிழ்நாட்டின் நலம் எவ்வளவு கெடும் என்பதை அறியாதவர் அல்ல கர்நாடகா முதல்வர் எனக் கூறியுள்ளார். “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதறி எறிவதோ இன்னோர் அணை கட்டுவதோ இந்திய இறையாண்மைக்கு ஏற்பு டையதல்ல. “ஆகவே சட்டத்திற்கும் மரபுரிமைக்கும் இணங்க தமிழக விவசாயிகளுக்குக் கர்நாடகா சகோதரர்கள் கைகொடுக்க வேண்டும்.

“உலகத் துயரங்களில் மிகவும் வலி தருவது உரிமையைப் பிச்சை கேட்பதுதான். உரிமை என்பது பிச்சைப் பொருள் அல்ல. “வானம் கண் திறப்பதையும் கர்நாடகம் அணை திறப்பதையும் நம்பித்தான் எங்கள் பாசனப் பரப்பில் பயிர் வளர்க்கிறோம்,” என்று வைரமுத்து தெரிவித் துள்ளார். “ஒரு விவசாயியின் மகன் என்ற முறையில் இந்த வேண்டு கோளை விடுப்பதாகவும் அவர் தமது அறிக்கையில் மேலும் கூறி உள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு