கோவையில் பதற்றம் நீடிப்பதால் 5,000 போலிசார் குவிப்பு

சென்னை: இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட் டதால் கோவையில் பதற்றம் நீடிக் கும் நிலையில் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ள னர். உயர் அதிகாரிகள் உட்பட சுமார் 5 ஆயிரம் போலிசார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள் ளனர். அண்மையில் இந்து முன் னணி நிர்வாகி சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப் பட்டார். இதையடுத்து கோவையில் கலவரம் மூண்டது. அவரது இறுதி ஊர்வலத்தின் போதும் பலர் வன்முறையில் ஈடுபட்டனர். வழிபாட்டுத் தலங்கள், கடை கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தடியடி நடத்தியும் பலரைக் கைது செய்தும் போலிசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

இதுவரை 400க்கும் மேற் பட்டோர் கைது செய்யப்பட்டிருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒட்டுமொத்த கோவை மாநக ரமும் காவல்துறையின் உச்சக் கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சந் தேக நபர்கள் அதிரடியாக கைது செய்யப்படுகின்றனர். இதற்கிடையே கோவையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவையை வன்முறை நகரமாக மாற்றும் சதிக்கு எவரும் துணை போகக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவையில் அமைதி திரும்ப வேண்டுமெனில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என திமுக பொருளா ளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!