சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் மீண்டும் தடை

புதுடெல்லி: சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்படாமல் இருக்க சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப், தாய் கவுரி ஆகிய 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து சசிகலா புஷ்பாவை 6 வார காலத்துக்கு கைது செய்ய கடந்த மாதம் இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த நிலையில் சசிகலா புஷ்பா மனு மீது நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்ச நீதிமன் றம் மீண்டும் தடை விதித்தது. மேலும் அக்டோபர் 3, 7 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வரும் சசிகலா புஷ்பாவுக்கு உரிய பாதுகாப்பு தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியப் பெருந் தலைவரும் சசிகலா புஷ்பா ஆதரவாளருமான விஎஸ்ஆர் ஜெகதீஸ் தமது ஆதரவாளர்களுடன் நேற்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்தார்.

மு.க. ஸ்டாலி னுடன் சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் கள். படம்: தமிழக ஊடகம்

Loading...
Load next