விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியா ஒரே ஏவுகணை மூலம் இரு சுற்று வட்டப் பாதைகளில் துணைக் கோள்களை நிலைநிறுத்தி முதன் முறையாக புதிய சாதனை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத் தில் இருந்து 8 துணைக் கோள்களுடன் 'பிஎஸ்எல்வி -சி35' ஏவுகணை நேற்று காலை 9.12 மணிக்கு வெற்றிகரமாக விண் ணில் பாய்ந்தது. இந்த ஏவுகணையில் கடல், வானிலை ஆய்வுக்காக 'ஸ்கேட் சாட் -1' என்ற 370 கிலோ கிராம் கொண்ட பிரதான செயற்கைக் கோள் இடம்பெற்று இருக்கிறது. ஏற்கெனவே வானிலை ஆய்வுக்கு பல துணைக்கோள்கள் அனுப் பப்பட்டு இருந்தாலும் வானிலை அறிவிப்புகளை முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்க இது ஏதுவாக இருக்கும் என்று கூறி உள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். அதுதவிர அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தயா ரித்துள்ள 5 செயற்கைக் கோள் கள், மும்பை ஐஐடி உருவாக்கி யுள்ள பிரதாம், பெங்களூரு பிஇஎஸ் பல்கலைக்கழகம் உரு வாக்கியுள்ள 'பிசாட்' துணைக் கோள்கள் போன்றவையும் இந்த ஏவுகணையில் இடம்பெற்றுள்ளன.

வழக்கமாக விண்ணில் ஏவப் படும் பிஎஸ்எல்வி வகை ஏவு கணைகள், துணைக்கோளை அதன் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்திவிட்டு தன் பணியை முடித்துக் கொள்ளும். ஆனால், நேற்று விண்ணில் ஏவப்பட்ட 8 துணைக்கோள்களும் இருவிதமான சுற்றுவட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டன. அதாவது இந்தியாவின் வானிலை, கடல் ஆய்வுக்கான ஸ்கேட்சாட்-1 துணைக்கோள் துருவ -சூரிய வட்டப் பாதையில் நிலை நிறுத்தப் பட்டது. மற்ற 7 செயற்கைக் கோள்களும் துருவ சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. இந்தியா இதுவரை இப்படி ஒரே ஏவுகணையைப் பயன்படுத்தி 2 விதமான சுற்று வட்டப் பாதை களுக்கு துணைக்கோள்களை கொண்டு சென்று நிலை நிறுத்திய தில்லை. நேற்று முதன்முதலாக அந்த முயற்சியை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது. "பிஎஸ்எல்வி சி35 ஏவு கணையை வெற்றிகரமாக விண் ணில் ஏவியதற்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இதயபூர்வமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அதிபர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!