சுடச் சுடச் செய்திகள்

வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கோரி திமுக வழக்கு

புதுடெல்லி: அடுத்த மாதம் நடை பெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டுகளைப் பயன் படுத்தினால் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது போல் உள் ளாட்சித் தேர்தலிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தினால் முறைகேடுகள் நடைபெறாது. எனவே, நேர்மை யான, நியாயமான தேர்தல் நடை பெற வாக்குப் பதிவு இயந்தி ரத்தைப் பயன்படுத்துமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்,” என்று ஆர்.எஸ்.பாரதி தமது மனுவில் கோரியுள்ளார்.

நேற்று முன்தினம் இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முன் பரிசீலனைக்கு வந்தபோது, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி முன்னிலை ஆனார். “உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி உடனே விசாரிக்க வேண் டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து திமுக மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசா ரணை நடைபெறும் எனத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக சில கோரிக்கை களுடன் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகியிருந்தார் ஆர்.எஸ்.பாரதி. ஆனால் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு திமுகவுக்கு அதிருப்தி அளித்த தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திமுக தலைமை நடத்திய ஆலோசனையின் முடி வில் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேற்கண்ட மனுவைத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon