ஆசிரியர் கொலை தொடர்பில் பிளஸ் டூ மாணவர்கள் கைது

புதுடெல்லி: டெல்லியில் வகுப்பறையில் ஆசிரியரைக் கொலை செய்த வழக்கில் பிளஸ்டூ மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி நாங்கலாய் அரசு பள்ளியில் வருகைப் பதிவு குறைவாக இருப்பதாக 12-ம் வகுப்பு மாணவன் ஒருவரை ஆசிரியர் முகேஷ் குமார் இடைநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் தனது நண்பருடன் சேர்ந்து ஆசிரியர் முகேஷ் குமாரை வகுப்பறையில் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலை தொடர்பாக அப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த ஆசிரியர் முகேஷ் குமார் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு