தனி மாநிலம் கேட்டு கூர்காலாந்து பகுதியில் போராட்டம் நடத்திய மக்கள்

தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கூர்காலாந்து பகுதியில் கூர்க் ஜன முக்தி மோர்ச்சா கட்சியினர் சார்பில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் கூர்க் இனத்தவர்கள் கூர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலுங்கானா தனியாகப் பிரியும்போது, மேற்குவங்க அரசு ஏன் கூர்காலாந்தை தனி மாநிலமாக்கக் கூடாது எனப் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர். முழு அடைப்பால் டார்ஜிலிங், கலிம்போங், குருஷோங், சுக்னா ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. முழு அடைப்பால் கூர்காலாந்து உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் நிலவியதால் 100க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர். படம்: -ஏஎஃப்பி