சிந்து நதி விவகாரம்: தண்ணீர் வழங்குவதை நிறுத்த இந்தியா திட்டம்

இஸ்லாமாபாத்: சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு வழங்குவதை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், "இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தை இந்தியா மட்டும் தன்னிச்சையாக முறித்துக்கொள்ள முடியாது," என்று கூறியுள்ள பாகிஸ்தான், இப்போது இதுதொடர்பாக உலக வங்கியிடம் முறையிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரத மர் ஜவஹர்லால் நேருவும் பாகிஸ் தான் அதிபர் அயூப் கானும் 1960ஆம் ஆண்டு, செய்து கொண்ட உடன்பாட்டின்கீழ் பீஸ், சட்லஜ், இந்தூஸ், செனாப், ஜீலம் ஆகிய ஆறு முக்கிய நதிகளின் நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்கின்றன. உரி தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டும் வகையில் சிந்து நதி நீர் வழங்குவதை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், பீதி அடைந்துள்ள பாகிஸ்தான் பிரநிதிகள் அவசர அவசரமாக அனைத்துலக நீதிமன்ற நீதிபதியை சந்தித்து முறையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் இந்தியா -=- பாகிஸ் தான் இடையே நதி நீர் ஒப்பந்தம் ஏற்படும்போது இடைத்தரகராக செயல்பட்ட உலக வங்கியிடமும் பாகிஸ்தான் முறையீடு செய் துள்ளது. வா‌ஷிங்டனில் உலக வங்கி அதிகாரிகளை பாகிஸ்தான் பிரதி நிதிகள் சந்தித்துப் பேசியதாக பாகிஸ்தானில் இருந்து வெளி வரும் 'ஜியோ நியூஸ்' தொலைக் காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ள 'மிக ஆதரவான நாடு' என்ற சிறப்பு அந்தஸ்தை மறு ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசிக்கப்பட உள்ளது. உலக வர்த்தக அமைப்பின் 'காட்' ஒப்பந்தம் கடந்த 1996ஆம் ஆண் டில் நடைபெற்றபோது 'மிக ஆதரவான நாடு' என்ற சிறப்பு அந்தஸ்தை அண்டை நாடான பாகிஸ்தானுக்கு இந்தியா வழங் கியது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா - பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய பாகிஸ்தானுக்குச் சிறப்பு சலுகை கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்தப் பிரச் சினை குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டது. அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளி யுறவு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் கூறும்போது, "56 ஆண்டுகள் பழமையான இந்தியா- பாகிஸ்தான் நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் தொடர்பில் அனைத்துலக சட்டத் தின்கீழ் இந்தியா தனித்து இதில் எந்த ஒரு முடிவும் எடுக்கமுடியாது. இது பாகிஸ்தானுக்கும் அதன் பொருளாதாரத்துக்கும் விடப்பட்ட மிரட்டல். இரு நாடுகளுக்கிடையே இடம்பெறும் போர் நடவடிக்கை போல் இது உள்ளது," என்றார்.2016-09-29 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!