உள்ளாட்சித் தேர்தல்: 11,181 பேர் மனுத்தாக்கல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இரு தினங்களில் மட்டும் 11,181 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்த மாதம் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளன. கட்சிகள் அறிவித்த வேட்பாளர்கள், சுயேட்சைகள் என நேற்று முன்தினம் வரை மட்டும் 11,181 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். வார்டு உறுப்பினர் பதவிக்கு 845 பேரும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 282 பேரும் ஊராட்சி தலைவர் பதவிக்கு 401 பேரும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 8641 பேரும் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு 979 பேரும் நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு 7 பேரும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 26 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!