பெங்களூரு: 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நாளை 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என அறிவிக் கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. மாநிலம் முழுவதும் பரவலாகப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. வன்முறைச் சம்பவங்களும் குறைந்தபாடில்லை. எனவே பெங்களூருவில் நாளை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ள தாக காவல்துறை தெரிவித்து உள்ளது. இதற்கிடையே நேற்று நடை பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து இன்று டெல்லி யில் நடைபெற உள்ள இரு மாநில முதல்வர்கள் கூட்டத்துக்குப் பின் னர் முடிவெடுக்கப்படும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து காவிரி யில் இருந்து தமிழகத்துக்கு தண் ணீர் திறந்துவிட வேண்டுமென கர்நாடகா மாநிலத் தலைமை அரசு வழக்கறிஞர் மதுசூதன் நாயக் அறிவுறுத்தி உள்ளார். “நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த 3 தினங்களுக்கு வினா டிக்கு 18,000 கன அடி தண் ணீரை தமிழகத்துக்கு விடுவித்தா லும், பெங்களூருவில் குடிநீர் தேவைக்கு போதிய நீர் இருக்கும்,” என மதுசூதன் தெரிவித்துள்ளார். எனினும் அவரது இக்கருத்தை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, டெல்லியில் நடைபெற உள்ள இருமாநில முதல்வர்கள் கூட்டத்தில் தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார் எனத் தெரிகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி