சுவாதி குடும்பத்தார் திடீர் மாயம்: பிரான்ஸ் தமிழச்சி கேள்வி

சென்னை: ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட இளம் பெண் சுவாதியின் பெற்றோர் மாய மாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது பெற்றோர் வசித்து வரும் வீடு பல நாட்களாகப் பூட்டியே கிடப்பதாகவும் அவர்கள் கடத்தப் பட்டிருக்கலாம் என்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி சந்தேகம் எழுப்பியுள்ளார். சுவாதி கொலை வழக்கு தொடர்பில் அவ்வப்போது பர பரப்புத் தகவல்களை வெளியிட்டு வருகிறார் தமிழச்சி. சுவாதியைக் கொன்றது ராம் குமார் அல்ல என்றும் அவரை சிலர் வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும் தமிழச்சி தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் சிறையில் இருந்த ராம்குமார் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. ஆனால் தமிழச்சியோ புழல் சிறையில் வைத்து ராம்குமார் கொல்லப்பட் டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பி உள்ளார். இந்த நிலையில் சுவாதியின் பெற்றோர் மாயமாகிவிட்டதாக ஒரு திடுக்கிடும் பதிவை தமிழச்சி தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "சுவாதியின் பெற்றோர் தலைமறைவாகி உள்ளனர். அவர்களாகவே சென்றார்களா அல்லது சுவாதியை மிரட்டிய கூட்டத்தினரால் கடத்தப்பட்டார் களா? "அவரது பெற்றோர் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட் டுள்ளார்கள்? பல நாட்களாக வீடு பூட்டப்பட்டுள்ள மர்மம் என்ன?" எனத் தமிழச்சி பல்வேறு கேள்வி களை எழுப்பி உள்ளார். சுவாதி கொலை தொடர்பான பல்வேறு தகவல்களை அறிந்த மணி என்பவர் அண்மையில் கொல்லப்பட்டதாகத் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்னர் பதிவிட்டி ருந்தார் தமிழச்சி. எனினும், பின்னர் அது தவ றான தகவல் என்று தெரிவித்தார். இதன் காரணமாக அவர் வெளி யிடும் தகவல்களின் நம்பகத் தன்மை குறித்துக் கேள்வி எழுந் துள்ளது. எனினும் அவர் தொடர்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

பிரான்ஸ் தமிழச்சி. படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!