இந்தியா அதிரடி தாக்குதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீருக்குள் இந்திய விமானப் படையினரும் ராணுவத்தினரும் அதிரடியாகப் புகுந்து நடத்திய தாக்குதலில் ஏழு பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் கொல் லப்பட்டனர்; ஒன்பது பேர் காயம் அடைந்தனர். அண்மையில் காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்கியதில் 18 வீரர்கள் மாண்டனர். இதை அடுத்து, தக்க பதிலடி தர இந்தியா உறுதி பூண்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் இந்தியாவிற்குள் ஊடு ருவும் வகையில் எல்லைப் பகுதி யில் பயங்கரவாதிகள் முகாமிட் டிருந்ததாக நம்பகமான தகவல் கள் கிடைத்ததாகவும் அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி யைத் தாண்டி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சுமார் 3 கி.மீ. தூரம் வரை சென்று திடீர் தாக்குதலில் ஈடு பட்டதாகவும் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் ரன்பீர் சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று முன்தினம் இரவு 12.30 மணியிலிருந்து அதிகாலை 4.30 மணி வரை இத்தாக்குதல் நீடித்ததாகக் கூறப்பட்டது. “ஜம்மு காஷ்மீரிலும் மற்ற இந்தியப் பெருநகரங்களிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தும் நோக்கில் எல்லைப் பகுதியில் ஏராளமான பயங்கர வாதிகள் முகாமிட்டிருந்ததாக நம்பகமான தகவல்கள் கிட்டின. இதையடுத்து, இந்திய மக்களின் பாதுகாப்பைக் கருதி இப்படி அதிரடித் தாக்குதலில் இறங்கி னோம். இதில் பயங்கரவாதிகள் பலரும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களும் பலியாகி னர். இந்தத் தாக்குதலைத் தொடர எண்ணம் இல்லை. ஆனாலும், எதற்கும் தயாராகவே இருக்கிறோம்,” என்று திரு ரன்பீர் விவரித்தார்.

அத்துடன், 20 இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்ட தாக அவர் குறிப்பிட்டார். தாக்குதலுக்குப் பிறகு அது குறித்து பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரிடம் தொலைபேசி மூலம் தகவல் சொன்னதாகவும் அப்போது இந்தியாவின் அக்க றைகளை விளக்கியதாகவும் அவர் தெரிவித்தார். ராணுவத்தின் இந்த நடவடிக் கைக்கு பாரதிய ஜனதா, காங் கிரஸ் கட்சிகள் பாராட்டுத் தெரி வித்துள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி