20 ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பரில் கனமழை

சென்னை: கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் செப்டம்பர் மாதம் மழை வெளுத்துக் கட்டியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் அங்கு 82 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வழக்கமாக சென்னையில் செப்டம்பர் மாதம் மழை அதிகம் பெய்யாது. கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் 314.50 மிமீ மழை பதிவானது. அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு செப்டம்பரில் 286 மிமீ மழை பெய்தது. இந்நிலையில் நடப்பாண்டில் இதுவரை 296 மிமீ மழை சென்னையில் பதி வாகியுள்ளது என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. இந்நிலையில் இரவு 10 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு வரை கொட்டித் தீர்த்த மழையால், சாலைகளில் தாழ்வான பகுதி களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழ கம், புதுச்சேரியில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையைப் பொறுத்தவரை யில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவில் மழை பெய்யும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதனால் சென்னைவாசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Loading...
Load next