உள்ளாட்சித் தேர்தல் களம்: 7 முனைப் போட்டியால் பரபரப்பு

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்த லில் இம்முறை 7 முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சில கட்சிகள் தனித்துக் களம் காண முடிவு செய் துள்ளன. தனித்துப் போட்டியிடுவதாக அதிமுகவும் பாமகவும் முன்பே அறிவித்துவிட்டன. கூட்டணி அமைக்க முடியாத விரக்தியில் தமாகாவும் தனித்து களமிறங்குகிறது. மேலும், பாஜக, தேமுதிகவும் கூட கூட்டணி அமைப்ப தில் ஆர்வம் காட்டவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற் றுள்ளன. மக்கள் நலக்கூட்டணியில் ஏற்கெனவே உள்ள 4 கட்சிகளும் தனி அணியாகக் களமிறங்க முடிவு செய்துள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவியது. தற்போது மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகி தேமுதிகவும் தமாகாவும் தனித்துப் போட்டியிடுவதால், உள் ளாட்சித் தேர்தலில் 7 முனைப் போட்டி நிலவுகிறது. சுயேச்சைகள் ஆதிக்க மும் இருக்கும் என்பதால் தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிரசாதம் வாங்க நெகிழிப் பைகளுக்குப் பதில்  சணல், காகிதம், அட்டை போன்றவற்றாலான பைகள், பெட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கோப்புப்படம்

20 Nov 2019

சணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு