பாஜக பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி

சென்னை: தமிழக பாஜக தலைவர்கள் மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த முற்பட்டதால் சென்னையில் பரபரப்பு ஏற் பட்டது. இது தொடர்பாக மூவ ருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்து முன்னணி செய்தித் தொடர்பாளரான சசிகுமார் அண்மையில் கோவையில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. சுமார் 400 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், சசிகுமார் படுகொலையைக் கண்டித்து பாஜக சார்பில் நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட் டன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண் டனர்.

எனினும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என போலிசார் தெரிவித்தனர். இதை ஏற்காத தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜ னும், பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவும் காவல்துறையின ருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்வதாக போலிசார் தெரிவித்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

பின்னர் அனைவரும் வேப் பேரி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப் பட்ட நிலையில், மண்டபத்துக்கு வெளியே 2 இருசக்கர வாக னங்களில் வந்த நான்கு பேர் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீச முற்பட்டனர். இதைக் கவனித்த பாஜக வினர், உடனடியாக சுதாரித்துக் கொண்டு, அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்ற மூவரும் தப்பிவிட்டனர். சிக்கியவரின் பெயர் முகமது மீரான் எனத் தெரியவந்துள்ளது. அவரிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர்.

தாக்குதல் முயற்சியைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட பாஜகவினர். படம்: சதீஷ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி

கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் இருந்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பீதிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

12 Nov 2019

இயந்திரத் துப்பாக்கி ஏந்தி வந்த மணமக்கள்

ஓவியர் பிரணவைச் சந்தித்த முதல்வர் பினராயி, ஓவியரின் கால்களைப் பிடித்து 'கைகுலுக்கிப்' பாராட்டினார். படங்கள்: டுவிட்டர்

12 Nov 2019

கைகளின்றி 'கைகொடுத்த' ஓவியர்