பேராசிரியை கொலை வழக்கில் இளையருக்கு மரண தண்டனை

கோயம்­புத்­தூர்: கோவை­யில் 2014ஆம் ஆண்டு இறு­தி­யில் பேரா­சி­ரி­யர் ஒரு­வரைப் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்து கொன்ற சம்ப­வம் பெரும் பர­ப­ரப்பை ஏற் படுத்­தி­யது. இந்த வழக்­கில் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வ­ருக்கு நேற்று முன்­தி­னம் மரண தண்டனை அளித்துத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. தர்­ம­ராஜ் மகள் ரம்யா (27), எம்.இ. பட்­ட­தாரி. இவர் ஒரு தனி­யார் கல்­லூ­ரி­யில் கணினி அறி­வி­யல் பிரி­வில் உதவி பேரா­சி­ரியை­யா­கப் பணி­பு­ரிந்து வந்தார். விடு­தி­யில் தங்கி கல்­லூ­ரிக்­குச் சென்று வந்தார். இந்­நிலை­யில் 3.11.2014 அன்று கார­மடை­யில் உள்ள தனது வீட்­டுக்­குத் தாயார் மால­தி­யு­டன் வந்­துள்­ளார். அன்­றி­ரவு 10 மணி­ய­ள­வில் திடீ­ரென ஒரு­வர் வீட்­டுக்­குள் புகுந்து மால­தியை உருட்­டுக் கட்டை­யால் தலை­யில் தாக்கியுள்­ளார். அவர் மயங்கி விழுந்­துள்­ளார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த ரம்­யா­வின் தலையிலும் உருட்­டுக்­கட்டை­யால் தாக்­கி­ய­தால் அவ­ரும் மயங்கி விழுந்­துள்­ளார். பின்பு மயங்­கிய நிலை­யில் இருந்த ரம்­யாவை அந்த இளை­ஞர் பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­துள்­ளார். சிறிது நேரத்­தில் ரம்யா உயிரிழந்தார். பின்பு இரு­வ­ரும் அணிந்­தி­ருந்த ஆறரை பவுன் தங்க நகை மற்­றும் ஒரு கைய­டக்­கக் கணி­னியை­யும் கொள்ளை­ய­டித்­துக்­கொண்டு தப்­பிச் சென்றார். இந்த வழக்கு விசா­ரணை கோயம்­புத்­தூர் மகிளா நீதி­மன்றத்­தில் நடந்து வந்தது. வழக்கு விசா­ரணை முடி­வடைந்த நிலை­யில், நீதி­பதி ராஜா நேற்­றுத் தீர்ப்­ப­ளித்­தார். அதில், அத்­து­மீறி நுழை­தல், பாலி­யல் வன்­கொ­டுமை, கொள்ளை, கொலை முயற்சி உள்­ளிட்­ட­வற்றுக்­குத் தலா ரூ.5,000 வீதம் ரூ.25,000 அப­ரா­த­மும் 7 ஆண்­டு­கள் சிறைத் தண்டனை அனுபவிக்­க­வும், கொலை செய்த கார­ணத்­துக்­காக மரண தண்டனை விதித்­தும் தீர்ப்­ப­ளித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!