அணைகளின் நீர் இருப்பைக் கண்டறிய சிறப்புக் குழு

புதுடெல்லி: காவிரி பிரச்சினையில் தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநி லங்களில் உள்ள அணைகளின் நீர்இருப்பு மற்றும் மழை அளவு குறித்து ஆராய்வதற்கு நிபுணர் குழு அமைக்க மத்திய அமைச்சர் உமாபாரதி (படம்) பரிந்துரைத் துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தர வுப்படி டெல்லியில் நேற்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய கர் நாடக முதல்வர் சித்தராமய்யா, கர்நாடகாவில் இருந்து தமிழகத் துக்குத் தண்ணீர் திறக்க முடி யாது. உண்மை நிலையை அறிய மத்திய அரசு நிபுணர் குழு அனுப்பி ஆராய வேண்டும்.

தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்தால் கர்நாடகாவில் குடிநீர் பற்றாக் குறை ஏற்படும். 2015=16 ஆம் ஆண்டு பருவமழை மிக மோச மாக உள்ளது என்று பேசினார். முதல்வர் ஜெயலலிதாவின் உரை யை வாசித்தா தலைமைச் செயலா ளர் ராமமோகன் ராவ். தமிழகத் திற்கு காவிரியில் இருந்து தண் ணீர் தர மறுப்பது அரசியல் சாச னத்தை மீறும் செயல் என்று கூறினார். காவிரி மேலாண்மை வாரி­யம் அமைக்க வேண்டும். டெல்டா பகுதியில் ஒரு போக சம்பா பயிரையாவது காப்பாற்ற தண்ணீர் திறப்பது அவசியமாகும். உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை. நீர் தர மறுப்பதை நீதிமன்ற அவ மதிப்­பாகக் கருதப்பட வேண்டும். சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்த கர்நாடகா அனுமதித் துள்ளது. கர்நாடகாவில் தமிழர் கள் அவமதிக்கப்படுகின்றனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி தண் ணீர் தருவதை உறுதிப்படுத்த வேண்டும் என அவரது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இரு மாநில முதல்வர்களின் உரைகளைக் கேட்ட அமைச்சர் உமாபாரதி, கர்நாடகாவிற்கு ஆத ரவான நிலைப்பாட்டில் நிபுணர் குழு அமைக்கப் பரிந்துரை செய் துள்ளார். அந்தக் குழு அணை­களின் நீர் இருப்பைக் கண்டறிவ­தோடு, மழை அளவு குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி பரிந்துரைத்துள்ளார். இது காலம் கடத்தும் செயல் என்பது தமிழக அதிகாரிகளின் வாதமாகும்.

தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா, கடந்த சில மாதங் களாகவே இந்த வாதத்தை முன் வைத்து வருகிறது. நேற்று பேசிய சித்தராமய்யாவும் இதே வாதத்தை முன்வைத்தே பேசினார். அதை கருத்தில் கொண்டே உமா பாரதி கர்நாடகா ஆதரவு நிலைப் பாட்டை எடுத்துள்ளார். அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத் தரவு குறித்தும் தமிழகத்தின் கோரிக்கையையும் உமாபாரதி பரிசீலனை செய்ததாகவே தெரிய வில்லை என்றும் தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.2016-09-30 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி