கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழமையான செப்புப் பட்டயம்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினத்தை அடுத்த மலையாண்ட அள்ளி கிராமத்தின் அருகே தோட்டிப்பாறை என்ற குக்கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் 80 வயதைக் கடந்த சின்னதம்பி என்பவரிடம் செப்புப் பட்டயம் ஒன்று இருப்பது தெரியவந்தது. அதை தருமபுரி அரசு கல்லூரியைச் சேர்ந்த வரலாற்றுத் துறை பேராசிரியர் சி.சந்திரசேகரன் ஆய்வு செய்து அந்த செப்புப் பட்டயம் 1820ஆம் ஆண்டில் எழுதப்பட்டது என்று கூறியுள்ளார். இந்தப் பட்டயத்தில் குருமன் பழங்குடியின மக்களின் வாழ்க்கை பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஆனால் 'குருமன்' என்ற சொல்லை அந்தப் பட்டயத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை. அதற்குப் பதிலாக 'எக்கடி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்­ளது. 'எக்கடி' என்னும் சொல் குருமன் இனத்தின் உட்பிரிவான 'கெடி குருமன்' என்பதன் மருவிய வடிவம் ஆகும்.

30 வரிகள் அடங்கிய இந்த செப்பேடு, சில கன்னடச் சொல் கலப்புடன் பேச்சு வழக்குத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. பழங்குடி மக்களின் குலதெய்வம், ஊர் மணியகாரர் யார், திருவிழாவின்போது யாருக்கு என்ன உரிமைகள், குழந்தை­களுக்கு முடியிறக்கும் விழா, தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு உள்ளிட்ட வழக்கம் மற்றும் உரிமைகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய­தாக இந்தச் செப்பேடு உள்ளது. எங்களது ஆய்வில் கிடைத்துள்ள 1820ஆம் ஆண்டைச் சேர்ந்த பட்டயத்தைப் போன்று எத்தனையோ வரலாற்று ஆவணங் கள் பல்வேறு சூழல்களால் அழிந்தும் சிதைந்தும் போயுள்ளன. சில பகுதிகளில் கோயில் கட்டும்போது கருவறை அமையும் இடத்தில் மண்ணுக்கடியில் பழங் கால செப்புப் பட்டயங்களைப் புதைத்ததாகக் கூறியுள்ளனர்.

மொத்தத்தில் 1820ஆம் ஆண் டிலும் அதற்கு முன்பும் என தங்களின் வாழும் சூழலில் வாய்த்த வசதிகளைக் கொண்டு வாழ்வையும் பழக்க வழக்கங் களை­யும் உரிமைகளையும் விழாக் க­ளையும் முடிந்தவரை ஆவண மாக்­கிச் சென்றுள்ளனர். அரசு இதுபோன்ற ஆய்வு களுக்குக் கூடுதல் ஊக்கமும் முக்கியத்துவ­மும் அளிக்க வேண்டும் என்றார் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!