அதிமுக பிரமுகர் தற்கொலை மிரட்டல்

கோயில்பட்டி: கோயில்பட்டியில் அதிமுக பிரமுகர் ஒருவர் கைத் தொலைபேசிக் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அவ்வட்டார அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோயில்பட்டி நகராட்சி 8வது வார்டு செயலாளரான 55 வயது ராமச்சந்திரன், நகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த ராமச்சந்திரன் நேற்றுக் காலை கோயில்பட்டி புதுகிராமத்தில் கைத்தொலைபேசிக் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த கோயில்பட்டி கிழக்குக் காவல் நிலைய காவல் துறையினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால் அவர் கைத் தொலைபேசிக் கம்பத்திலிருந்து கீழே இறங்கினார். அவர் மீது காவல்துறையினர் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி

கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் இருந்தது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களைப் பீதிக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம்

12 Nov 2019

இயந்திரத் துப்பாக்கி ஏந்தி வந்த மணமக்கள்

ஓவியர் பிரணவைச் சந்தித்த முதல்வர் பினராயி, ஓவியரின் கால்களைப் பிடித்து 'கைகுலுக்கிப்' பாராட்டினார். படங்கள்: டுவிட்டர்

12 Nov 2019

கைகளின்றி 'கைகொடுத்த' ஓவியர்