உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 65,000 பேர்

சென்னை: தமிழகத்தின் உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிடு வதற்கு 65,376 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 22,469 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. இம்மாதம் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங் களாக நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகம் முழு வதும் பல பதவிகளுக்குப் போட்டி யிட மனுத்தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி 65,376 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று மனுத் தாக்கல் தொடர்ந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அதிரடியாக அறிவிக்கப்பட்டதால் போதுமான அவகாசம் வழங்கப்பட வில்லை என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் கூறி யிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் உள் ளாட்சித் தேர்தலில் 8 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனியாகவே களம் காண் கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அக்கட்சி உள் ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப் புடன் செயல்பட்டு வருகிறது.

Loading...
Load next