‘அரசாங்கம் மட்டுமே செய்துவிட முடியாது; தூய்மை எண்ணம் மக்களுக்கும் வரவேண்டும்’

புதுடெல்லி: மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஈராண்டு கள் ஆகியுள்ளதையொட்டி ‘இந்தி யாவில் தூய்மை நிலை’ என்ற பெயரிலான கருத்தரங்கம் நேற்று முன்தினம் டெல்லியில் நடை பெற்றது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். “மேலைநாடுகளை ஒப்பிடும் போது தூய்மை விஷயத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியுள் ளது. வளமான நாட்டை உருவாக்க அங்குள்ள மக்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். தூய்மை பேணப்படும் போதுதான் ஆரோக் கியம் அங்கு இருக்கும். அந்த நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது தான் ‘தூய்மை இந்தியா’ திட்டம். “இந்தத் திட்டம் ஏதோ அரசின் திட்டம் என்று மக்கள் நினைக்கக் கூடாது. அரசு மட்டுமே ஒரு நாட்டை தூய்மைப்படுத்திவிட முடி யாது. நாட்டு மக்கள் அனை வரும் ஒன்றிணைந்து இந்தத் திட் டத்தை ஓர் இயக்கமாக மாற்றி னால் மட்டுமே தூய்மையான இந்தி யாவை நம்மால் உருவாக்க முடியும்.

“தூய்மை இந்தியா திட்டம் பற்றி நாட்டு மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு உள்ளது. எனினும், தூய்மை பற்றிய விழிப்புணர்வு நம் மக்கள் மனதில் பெரிதாக இல்லை. சாலைகளில் குப்பைகள் கொட்டிக் கிடந்தால் அதனை அருவருப்பாகப் பார்க்கும் மக்கள், தூய்மை என் பதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள ஏனோ மறுக்கிறார்கள். இந்த எண்ணத்தை முதலில் ஒழிக்க வேண்டும். “நம் வீட்டை எப்படி தூய்மை யாகப் பேண விரும்புகிறோமா அப்படித்தான் நமது சுற்றுப்புறத் தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோவிலுக்கு வரவேண்டும் என யாராவது நினைத்தால், நீதிமன்றம் சென்று உரிய உத்தரவுகளுடன் வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். படங்கள்: ஊடகம்

15 Nov 2019

அமைச்சர்: சபரிமலைக்கு வரும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு தரமாட்டோம்

மனிதர்கள் சுவாசிக்கத்  தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால் இம்மாதம் முதல்  தேதி அங்கு மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. படம்: ஊடகம்

15 Nov 2019

புதுடெல்லி: சுவாசிக்க காற்றை விற்பனை செய்யும் ‘ஆக்சிஜன் பார்’