விழாக்காலச் செலவு ரூ.25,000 கோடி

புதுடெல்லி: இந்த ஆண்டு விழாக் காலப் பருவத்தில் இந்திய மக்கள் ரூ.25 ஆயிரம் கோடி செலவழிப் பார்கள் என்று தொழில்துறை அமைப்பான ‘அசோசேம்’ கணித் துள்ளது. கடந்த ஆண்டில் செலவு செய்துள்ள தொகையைவிட அவர் கள் கூடுதலாக 25% செலவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்ப தாகவும் அந்த கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு விழாக்காலப் பருவத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாயை மக்கள் செலவு செய்தது குறிப்பிடத்தக்கது. நேற்று தொடங் கிய நவராத்திரி பண்டிகையுடன் விழாக்காலம் தொடங்குகிறது. நவராத்திரியை அடுத்து தசரா, தீபாவளி, அதைத் தொடர்ந்து புத்தாண்டு, பொங்கல் என அடுத் தடுத்து விழாக்கள் வர உள்ளன. இந்திய ‘இ=காமர்ஸ்’ நிறுவனங் களில் இதுவரை இல்லாத அள வுக்கு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அசோசேம் நடத்திய ஆய்வில் தெரியவந் துள்ளது. இந்தியா முழுவதும் பத்து முக்கிய நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. மும்பை, அகமதா பாத், பெங்களூரு, சென்னை, டெல்லி - என்சிஆர், ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கோல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களே அவை. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட 2,500 பேரிடம் கருத்து கேட்கப் பட்டது.

விழாக்காலத்தில் இந்திய இ-கா மர்ஸ் நிறுவனங்கள் பரபரப்பாக இருக்கும் என்றும் பயனீட்டாளர்கள் கடந்த ஆண்டு செலவழித்த 20 ஆயிரம் கோடியை விடவும் கூடு தலாக 25 விழுக்காட்டுத் தொகை யை செலவழிப்பார்கள் என்று எதிர் பார்க்கிறோம் எனவும் அசோசேம் அமைப்பின் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராவத் கூறினார்.