கறுப்புப் பண காலக்கெடு முடிந்தது: எந்த நேரத்திலும் அதிரடிச் சோதனை

புதுடெல்லி: பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கணக்கில் வராத கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவர தாமாக முன்வந்து விவரங்களை வெளியிடும் திட்டத்தை இவ் வாண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிமுகம் செய்தது. கணக் கில் காட்டாத அசையும், அசையா சொத்துகள், ரொக்கப் பணம் ஆகியவை தொடர்பான விபரத்தை வருமான வரித்துறையிடம் தெரிவித்தால் அவர்கள் தெரிவித்த தொகையில் 45 விழுக்காடு அபராதம் விதிக்கப்படும் என்றும் மேற்கொண்டு நடவடிக்கை எது வும் இராது என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.

இதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் இரவு (செப்.30) வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பலரும் தங்களது கள்ளப் பணம் தொடர்பான விவரங் களைத் தெரிவிக்கத் தொடங்கி னர். நேற்று முன்தினம் பிற்பகல் வரை சுமார் ரூ.65,000 கோடி அளவுக்குக் கறுப்புப் பணம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப் பட்டது. இதற்கு ரூ.30,000 கோடி அபராதம் விதிக்கப்பட உள்ளது. மும்பை சாலை ஓர உணவுக் கடைகளில் இரண்டு வாரங்களாக வருமான வரித்துறையினர் திடீர் சோதனைகளை நடத்தினர். அதன் விளைவாக அந்தக் கடைகளை நடத்தும் சிலர் 50 கோடி ரூபாய் கள்ளப் பணம் தொடர்பான விவ ரங்களை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு 22.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரதமர் மோடி யின் இந்தத் திட்டம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று கூறப்படுகிறது. கறுப்புப் பண பெரும்புள்ளிகள் பலர் இறுதிக் கெடு வரை தாங்களாக முன் வந்து விவரங்களைத் தெரிவிக்க வில்லை. அவ்வாறு தெரிவிக்காத கறுப்புப் பண முதலைகளின் பட்டியலை வருமான வரித்துறை தயாரித்துள்ளது. அவர்களிடம் எந்த நேரமும் அதிரடிச் சோதனைகள் நடத்தப்படும் என்றும் கறுப்புப் பணம் கைப் பற்றப்பட்டால் அபராதம் வசூலிப் பதோடு அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்றும் அதி காரிகள் கூறியுள்ளனர். “கறுப்புப் பண விவரங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தெரிவிக்காதோரை வருமான வரித்துறை சும்மாவிடாது,” என பிரதமர் மோடி ஏற்கெனவே எச் சரிக்கை ஒன்றை வெளியிட்டிருந் தது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி