குமரி கடற்கரை: ஆளில்லா விமானத்தால் பரபரப்பு

குமரி: கன்னியாகுமரியில் நேற்று அதிகாலை திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை ஆளில்லா விமானம் மூலம் படம் பிடித்த இளையர்களைப் பிடித்து கடலோர காவல் குழும போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரையில் ஆளில்லா விமானம் மூலம் யாரோ படம் பிடிப்பதாக கிடைத்த தகவலை யடுத்து போலிசார் அங்கு விரைந்தனர். அப்போது மூவரும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆளில்லா விமானத்தை இயக்கு வதை கண்டனர். இதையடுத்து காவல் நிலை யத்துக்கு அழைத்துச் செல்லப் பட்ட மூவரிடமும், பிறகு விரி வான விசாரணை நடைபெற்றது. இதில், இரண்டு பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மற்றொரு நபர் நாகலாந்து மாநிலத்தில் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இந்தியாவைப் பற்றிய குறும்படம் தயாரிப்பதாகவும், அதற்காக கன்னியாகுமரியில் சூரியோதயம், கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகிய வற்றைப் படம் பிடித்ததாகவும் மூவரும் தெரிவித்துள்ளனர்.

 

கன்னியகுமாரியில் உள்ள திருவள்ளுவர்சிலை

Loading...
Load next