மின் கம்பியிடம் தலைவணங்கி தப்பித்த ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மின் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நெருங்குவதையொட்டி அம்மாநிலத்தில் உள்ள 223 சட்டமன்றத் தொகுதிகளை இணைக்கும் வகையில் பேரணி நடத்தி வருகிறார் ராகுல். கிட்டத்தட்ட 2,500 கிலோ மீட்டர் தூரமுள்ள பேரணியின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஆக்ரா சென்று சேர்ந்தார்.

அங்குள்ள தாஜ் நகரத்தின் ஃபவ்வாரா பகுதியில் உள்ள மகாராஜா ஆக்ராசென் சிலைக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாலை ஒன்றை அந்தச் சிலைக்கு அணிவிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த மின்சாரக் கம்பி ஒன்று ரா-குலின் தலையில் உரசியது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ராகுல், தலையைக் குனிந்தவாறே பின்னோக்கி நகர்ந்தார். ராகுல் நிலைதடுமாறுவதைக் கண்ட சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்தனர். படம்: இந்திய ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு