இந்திய வீரரை மீட்க தீவிர முயற்சி

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய ராணுவ வீரரை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப் பட்டுள்ளன என்று இந்திய பாது காப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்றுத் தெரிவித்தார். “எல்லைக்கோட்டை அவர் தாண்டிவிட்டார். இதனால் ராணுவ தலைமை இயக்குநர் வழியாக வலுவானத் தொடர்பு மூலம் அவரை மீட்பதற்கான நட வடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன” என்று அவர் சொன்னார். கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி 22 வயது சந்து பாபுலால் சவான் தவறுதலாக எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டார். அவரை பாகிஸ்தான் ராணு வத்தினர் பிடித்து வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்தியா தகவல் தெரிவித்துள் ளது. “இருதரப்பிலும் வீரர் களும் பொதுமக்களும் தவறு தலாக எல்லையைத் தாண்டி விடுவது வழக்கம். அவர்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிடு வார்கள்,” என்று இந்திய ராணு வம் கூறியுள்ளது.

22 வயது சந்து பாபுலால் சவான். கோப்புப் படம்