ஜெயலலிதா உடல்நலம் தேறி வருகிறது: தமிழக ஆளுநர் தகவல்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை வேக மாகத் தேறி வருவதாக மாநில ஆளுநர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மருத்துவ மனைக்குச் சென்ற அவர் அங்கு ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்றுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக முதல்வருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து, மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் மருத்து வர்களுக்கு பாராட்டுத் தெரிவிக் கப்பட்டுள்ளது. “முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கே சென்று அவரைப் பார்த்தார் ஆளுநர். அப்போது முதல்வருக்கு அளிக்கப் பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்கள் விளக்கினர். “இதற்காக மருத்துவர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார். முதல்வர் விரைவில் நலமடைய வேண்டி பழக்கூடை ஒன்றையும் ஆளுநர் அளித்தார்,” என ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

ஆளுநரின் வருகையின்போது நாடாளுமன்ற துணைத் தலவர் தம்பித்துரை, அமைச்சர் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, விஜயபாஸ்கர், தலை மைச் செயலர், அரசு ஆலோசகர் ‌ஷீலா பாலகிருஷ்ணன், உள்ளிட் டோரும் மருத்துவமனையில் இருந்தனர் என அச்செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது. இதற்கிடையே, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தினந்தோறும் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியு றுத்தி உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “முதல்வரின் தற்போதைய உடல்நிலை, அவருக்கு ஏற்பட் டுள்ள நோய்த்தன்மை, அதற்கு அளிக்கப்பட்டு வருகிற மருத்துவ சிகிச்சைகள் குறித்து முழு விவரங்களையும் மாநிலத் தலைமைச் செயலாளர் மக்களுக்கு தினந் தோறும் தெரிவிக்க வேண்டும்,” என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்