தேவாலயத்தில் வைத்து திமுக கவுன்சிலர் படுகொலை

சென்னை: தேவாலயத்துக் குள் புகுந்து மர்ம நபர்கள் கவுன்சிலர் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஆவார். நேற்றுத் காலை தாம்பரம் அருகே உள்ள தேவாலயத்துக்குச் சென்றிருந்தார் தனசேகரன். அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது, திடீரெனத் தேவாலயத்துக் குள் நுழைந்த 4 பேர் அவரை அரிவாளால் வெட்டிச் சாய்த்தனர். அச்சமயம் தேவாலயத்தில் ஏராளமானோர் கூடி யிருந்தனர். அவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இக்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலிசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின் றனர். கொலையாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக தனசேகரன் கொல்லப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்த கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப் பட்ட நிலையில் தாம்பரம் பகுதி திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலிசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்