ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக ஆளாளுக்குக் கோரிக்கை, வழக்கு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சீராகி இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அரசு நிர்வாகத்தைக் கவனிக்க பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். “நிரந்தர ஆளுநர் இல்லாத நிலையில் முதல்வரும் 12 நாட் களாக மருத்துவமனையில் உள் ளார். “இதனால் தமிழகத்தில் நடக் கும் பல்வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்தி முடிவுகளை எடுக்க இயலாத நிலை உள்ளது. எனவே, தமிழக அரசாங்கம் பொறுப்பு முதல்வர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத் துள்ளார். இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உண்மையான அறிக்கை வெளியிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தெடர்ந்து உள்ளார்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.மகாதேவன் முன்னி லையில் அவசர வழக்காக இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி சார்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அதனை மறுத்த நீதி பதிகள், “நீங்கள் மனுவாகத் தாக் கல் செய்யுங்கள் விசாரணை நடத்துகின்றோம்,” என்றனர். அதனைத் தொடர்ந்து மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, இந்து நாளேட் டின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி நேற்று தமது டுவிட் டரில் ஒரு செய்தியை வெளியிட் டார். அதில், “மகிழ்ச்சியான செய்தி... முதல்வர் ஜெயலலிதா நலமுடன் தேறிவருகிறார்... அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டதாக மருத்துவ மனையில் ஜெயலலிதாவை நேரில் பார்வையிட்ட அவருக்கு நெருக்க மான நபர் தெரிவித்துள்ளார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தொடர் கண் காணிப்பில் ஜெயலலிதா வைக்கப் பட்டுள்ளார் என்றும் அவர் பூரண நலத்துடன் உள்ளார் என்றும் மருத் துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்கிடையே, நேற்றுக் காலை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அங்கிருந்த அதிமுக மூத்த தலை வர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் ஜெய லலிதாவின் உடல்நிலை குறித்து ஆளுநர் அளித்த அறிக்கையில் திருப்தியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு வந்தேன்,” என்றார். ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரி வித்து வரும் நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் ஜெயலலிதா விரைவில் குண மடைய பிரார்த்திப்பதாக தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விஷமிகள் உளவு பார்க்க வாய்ப்பிருப்பதால் அப்பல்லோவில் எந்த ஒரு நோயாளியும் புதிதாகச் சேர்க்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், ஜெயலலிதா சிகிச்சை பெறுவதை மருத்து வர்கள், தாதியர் யாராவது அறியா மல்கூட புகைப்படம் எடுத்து அது வெளியாகிவிடக் கூடாது என் பதால் பணியாளர்கள் அனைவரும் தங்களது கைபேசியை வரவேற் பறையில் வைத்துவிட்டுச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் அறி வுறுத்தியுள்ளதாகக் கூறப்படு கிறது.