பாலியல் புகார்: சசிகலா புஷ்பாவிடம் துருவித் துருவி விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் கெடுத்த பாலியல் புகாரின் பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்பிணை கேரி மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்பிணை பெற்றுக்கெள்ளும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சசிகலா புஷ்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தெடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் சசிகலா புஷ்பா. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதேடு கைது செய்யவும் தடை விதித்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா நேற்று முன்னிலையானார். அவரிடம் போலிசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் சசிகலா புஷ்பா நேற்று செய்தியாளர் களிடம் பேசினார். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!