உயிர்காப்புத் திறனில் மேலும் பலர் தேர்ச்சி

சிங்கப்பூரில் பயங்கரவாத மிரட் டல்களைச் சமாளிக்கும் வகையில் பொதுமக்களை ஆயத்தப்படுத்த தேசிய இயக்கம் ஒன்று தொடங்கி இருக்கிறது. அதற்கு முன்பாகவே அதிகமான மக்கள் உயிர்காப்பு முதலுதவித் தேர்ச்சிகளைக் கற்றுக்கொண்டு வருகிறார்கள். சிங்கப்பூரில் சென்ற ஆண்டு செயற்கை சுவாசப் பயிற்சி தேர்ச் சியைக் கற்றுக்கொண்டோர் எண்ணிக்கை சுமார் 84,000. இந்த எண்ணிக்கை 2008ல் 32,000 தான் என்று சிங்கப்பூர் தேசிய செயற்கை சுவாச மன்றம் தெரிவித்தது. செயற்கை சுவாச தேர்ச்சிப் பயிற்சியைக் கற்றுக்கொண்டால் அதிக பயன் இருக்கிறது என்பதை பலரும் புரிந்துகொண்டு உள்ள னர். இதன் காரணமாகவே பலரும் அந்தத் தேர்ச்சிகளைக் கற்றுக் கொள்கிறார்கள் என்று இந்த மன்றத்தின் தலைவர் வெங்கட ராமன் அனந்தராமன் தெரிவித் தார். சிங்கப்பூரில் இப்போது முன்னிலும் அதிகப் பள்ளிக்கூடங்கள், சமூக நிலையங்கள், நிறு வனங்கள் இந்தப் பயிற்சியை அளிக்கின்றன. சிங்கப்பூர் ஆயு தப்படைகளும் இத்தகைய தேர்ச்சி களை வீரர்களுக்குக் கற்பிக் கின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அங்கீகாரம் பெற்ற இந்தத் தேர்ச்சிப் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை 2008ல் 28 ஆக இருந்தது. சென்ற ஆண்டில் இது 93க்கு அதிகரித்தது. அதிகமா னோர் இந்தத் தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்வதற்கு இவையும் காரணம் என்றார் அவர். இந்தத் தேர்ச்சியைப் பலரும் கற்றுக்கொள்வதால் ஒருவருக்கு ஆபத்து வரும்போது அவர்கள் உதவ முடியும் என்று பேராசிரியர் அனந்தராமன் குறிப்பிட்டார். பயங்கரவாத மிரட்டல்களைச் சமாளிக்க மக்களை ஆயத்தப் படுத்த ஓர் இயக்கம் சென்ற மாதம் இங்கு தொடங்கப்பட்டது. அதனையொட்டி தீவு முழுவ தும் இத்தகைய செயற்கை சுவாசப் பயிற்சியை மக்கள் கழகம் அறி முகப்படுத்தியது. நின்று போகும் இதயத்தை மீண்டும் இயக்கக் கூடிய தானியக்க புற இதய தூண்டுக் கருவிகளைப் பயன் படுத்துவது பற்றியும் கழகம் மக் களுக்குப் போதித்து வருகிறது.

Loading...
Load next