ஜெயா உடல்நிலை: அறிக்கை தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா வின் உடல்நிலை தேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவமனை நிர் வாகம் அறிவித்துள்ள நிலையில், முதல்வரின் உடல் நிலை குறித்து (நாளை) 6ஆம் தேதிக்குள் தமிழக அரசு உரிய விவரங்களை அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்துள்ளது. இதற்கிடையே ஜெயலலிதா வுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ஊர் திரும்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திடீர் உடல்நலக் குறைவு கார ணமாக கடந்த 22ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அவரது உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம், முதல்வர் நன்றாக இருக்கிறார் என்று மட்டுமே அறிக்கை வழி தெரிவித்து வந்தது. ஜெயலலிதா வின் புகைப்படமோ, காணொளித் தொகுப்பு ஆதாரங்களோ இது வரை வெளியிடப்படவில்லை.

இது தொடர்பாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் பல் வேறு கேள்விகளை எழுப்பியுள்ள னர். இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக மக்களின் நலன் கருதி, முதல்வரின் உடல் நலம் குறித்த உண்மை நிலையை அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

Loading...
Load next